மின்னணு பணப்பரிவர்த்தனையில்‌ சமையல்‌ எரிவாயு உருளைக்கான கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளர்களை இந்தியன்‌ ஆயில்‌ நிறுவனம்‌ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பு: இண்டேன்‌ விநியோகஸ்தர்கள்‌ , இண்டேன்‌ . எல்பிஜி வீட்டு உபயோக சமையல்‌ எரிவாயு உருளைகளை வாடிக்கையாளர்களின்‌ இல்லங்களுக்கு வழங்குகிறார்கள்‌. இண்டேன்‌ உருளைக்குரிய சரியான விலையை செலுத்துவதற்காக,வாடிக்கையாளர்களை டிஜிட்டல்‌ பேமெண்ட்‌ செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

இதன்படி வாடிக்கையாளர்கள்‌ ஐவிஆர்‌எஸ்‌ மூலம்‌ முன்பதிவு செய்தவுடன்‌ அவர்களின்‌ செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக பணம்‌ செலுத்துவதற்கான லிங்க்‌ அனுப்பி வைக்கப்படும்‌. அந்த முகவரி மூலமாக, பல்வேறு இணைய பரிவர்த்தனை வாயிலாக ஒரு நாளைக்குள்‌ பணம்‌ செலுத்தலாம்‌. இந்த வழிமுறையில்‌
வாடிக்கையாளர்கள்‌ எந்த விதமான கூடுதல்‌ கட்டணத்தையும்‌ செலுத்த வேண்டாம்‌.

நிறுவனத்தின்‌ பணியாளரை இந்த முறையிலும்‌ எம்பிஓஎஸ்‌ கருவி மூலம்‌ கட்டணத்தைப்‌ பெறவும்‌ வலியுறுத்தலாம்‌. பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக்‌ கொள்ளலாம்‌. மேலும்‌ உருளை நன்றாக சீலிடப்பட்டுள்ளது, எடை பற்றி சோதித்து காண்பிக்கப்பட்டது, கசிவு உள்ளதா என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது, குறிப்பிட்ட கட்டணம்‌ மட்டுமே வசுலிக்கப்பட்டுள்ளது, ஒட்டு மொத்தமான
வாடிக்கையாளர்கள்‌ அனுபவம்‌ உள்ளிட்டவை பற்றி வாடிக்கையாளர்கள்‌ நாங்கள்‌ அனுப்பும்‌ . குறுஞ்செய்திக்குப்‌ பதிலளிக்க வேண்டும்‌. இதன்‌ மூலம்‌ வாடிக்கையாளர்களுக்கு மேலும்‌ நாங்கள்‌ நன்றாக சேவை வழங்க முடியும்‌.

இந்தியன்‌ ஆயில்‌ நிறுவனம்‌, டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ்‌ கொடுப்பதை ஆதரிக்கவில்லை . மேலும்‌ விவரங்களுக்கு காலை 9.30 முதல்‌ மாலை 5.15 வரை சென்னை : 044 24339235, 24339236 , மதுரை : 0452 253395, திருச்சி : 0431 2740066, 2740880, கோயம்புத்தூர்‌: 04222247396, 2240696 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌. எல்பிஜி குறித்த அவசர சேவை குறித்து 1906 என்ற எண்ணில்‌ 24 மணி நேர சேவையை அணுகலாம்‌. இண்டேன்‌ குறித்த புகார்களுக்கு 1800 2333 555 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை அணுகலாம்‌. இவ்வாறு அதில்‌ தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here