மின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட் CEO

0
1021

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் .
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவன CEO பி.ராம்நாத் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தார் . அந்த்ப் பேட்டியின் விவரம் கீழே-

100 நாட்கள் அமைதியாக நடந்துக் கொண்டிருந்த போராட்டம் , மே 22 ஆம் தேதியில் என்னவானது ?

மே 22-ஆம் தேதி நடக்கவிருந்த போராட்டம் குறித்த எச்சரிக்கையை சமூக ஊடகங்கள் வழியாக போராட்டக்காரர்கள் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெறுப்பைச் சொல்லும் வகையில் சமூகவலைதளங்களில் நிறைய பதிவுகள் இருந்தன . தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை பற்றி எரிவதுபோலான போஸ்டர்களும் அதில் இருந்தது. . மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு கடைசி நாளாக இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். ஊடக செய்திகள் மூலம் காவல்துறையினரும், துணை ஆட்சியரும் போராட்டக்காரர்களுடன் சமரசம் பேச அழைப்பு விடுத்திருந்தனர் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அமைதியான முறையில் போரட்டம் நடத்த அனுமதி கொடுத்திருந்தார்கள் .

அமைதியான முறையிலானப் போராட்டத்துக்கு ஒரு தரப்பு ஒப்புக்கொண்டிருந்தது , மற்றொரு தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் வன்முறை நடந்தது . அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் துரதிர்ஷ்டவசமானவை.

நிச்சயமாக துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பது பற்றீ திட்டமிட்டிருக்க வேண்டும். எங்கள் வளாகத்துக்குள் எங்கள் சொந்த மக்கள் மீது நடந்த வன்முறைக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்களுக்குச் சொந்தமான 15 முதல் 20 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

எங்களது டீசல் ஜெனரேட்டர் முழுவதுமாக நாசமாக்கப்பட்டுள்ளது. நல்லவேளை போராட்டக்காரர்கள் குடியிருப்புகளுக்குள் நுழையவில்லை. அதற்காக நன்றி சொல்கிறேன்.

அதேபோல் இது வரை எங்கள் ஆலை மீது எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதற்கும் நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சில நாட்களில் எல்லாம் சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் .

போராடியவர்கள் யார்? ஏன் அவர்கள் ஆலையை மூடச் சொல்கிறார்கள் ?

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக எங்கள ஆலை மூடப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் எவ்வித அசம்பாவதிமும் நடக்கவில்லை. இப்போது நடக்கும் இந்தப் போராட்டங்கள் திடீரென எங்கிருந்தோ உருவாகியிருக்கின்றன . ஏதோ தூண்டுதலின் பேரில்தான் இந்த்ப் போராட்டங்கள் நடைபெறுகின்றன எந்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த போராட்டங்களுக்கு பின்னால் இயங்குவது NGO ஆக இருக்கலாம். NGOக்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி வாங்கி இங்கிருக்கும் தொழற்சாலைகளை அகற்றும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்.

பல NGOக்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செயல்படும் பல NGOக்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி வாங்கி இந்த மாதிரி போராட்டங்களுக்கு உதவி செய்கிறது . இது மிகவும் முக்கியமான பிரச்சினை இதன் பின்னணியை யாராவது அறிந்து சொல்ல வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ரூ.500 கோடிக்கு மேல் ஆலை நிர்வாகம் முதலீடு செய்திருக்கிறது. எல்லா விதிமுறைகளையும் நாங்கள் முறையாக பின்பற்றுகிறோம்.மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்து மாதிரிகளை சேமித்து அத்தனையையும் ஆவணப்படுத்தி வைத்துள்ளது.

ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும் , ஆலை விரிவாக்கம் குறித்து மக்கள் கருத்து கேட்கப்படவில்லை என்பது பற்றியும் உங்கள் கருத்து?

ஆலை விரிவாக்கம் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆர்.பாத்திமா என்பவரின் அவசர மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பு . எங்களது கருத்துகளை முன்வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எங்களது ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் நிலம் ஒதுக்கியது. இரண்டாவது யூனிட்டுக்கான நிலம் 2005-ல் விலைக்கு வாங்கப்பட்டது . 2006-க்கு முன் பெறப்பட்ட நிலங்கள் தொடர்பாக மக்களின் கருத்து கேட்க தேவையில்லை.

அதனாலேயே நாங்கள் மக்கள் கருத்து கேட்காமல் நேரடியாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்து தடையில்லா சான்றிதழ் வாங்கினோம்.

ஆனால், இப்போது எல்லாவற்றையும் மாற்றி பேசுவதால் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை அணுகவிருக்கிறோம். இப்போது ஆலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால் அரசாங்கம் மின்விநியோகத்தைத் துண்டித்திருக்கிறது. அதனால் எங்களுக்கு பாதிப்பில்லை.

இந்த வழக்கு ஜூன் 6-ஆம் தேதி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது என்ன மாதிரியான விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பொறுத்து நாங்கள் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்.

உடனடி தீர்வு என்ன?

இந்தத் தருணத்தில் இப்பிரச்சினைக்கு சட்டபூர்வமாக மட்டுமே தீர்வு காண முடியும்.

இங்கு நடக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆலையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிப்பீர்களா?

நாங்கள் அது பற்றி யோசிக்கவேயில்லை . இந்த ஆலையை தூத்துக்குடியில் அமைப்பதற்காகவே 20 வருடங்களுக்கு முன் இங்கு வந்தோம். இரண்டாவது ஆலை அமைக்க வேறு இடங்கள் கிடைத்தும் நாங்கள் தூத்துக்குடியைவிட்டுப் போகவில்லை. அந்த முடிவு தொடர்கிறது, அது இப்போது மாறாது.

இந்த மாதிரி உங்களுக்கெதிரான போராட்டங்கள் மாநிலத்தில் தொழில் முதலீட்டைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?

2015-ல் உலக தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற்ற போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இரண்டாவது யூனிட்டை ஆரம்பிக்க நாங்கள் தயாராக இருந்தோம்.

அரசு மதுரை – தூத்துக்குடி பகுதியை மேம்படுத்த நல்ல வியூகங்களை வைத்திருந்தது. தென்மாவட்டங்களில் குறைந்த விலையில் நிலம், வரிச் சலுகை என்று நிறைய சலுகைகளை அரசு அறிவித்தது. இந்த மாதிரியான போராட்டங்களால் அரசு ஏற்படுத்திய அத்தனை முன்னெடுப்புகளும் காணாமல் போய்விடும்.

இந்த சம்பவத்துக்குப் பின் உங்கள் நிறுவனத்தின் மீது படிந்துள்ள கறையை எப்படி மாற்றுவீங்க ?

பல ஆண்டுகளாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்கள் ஆலைக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களை அழைத்து வந்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறோம் . இந்த போரட்டங்களுக்கு நடுவிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மற்றும் கிராமத்து மக்களையும் எங்கள் ஆலையை வந்து பார்வையிட அழைத்திருந்தோம். ஆநால் அவர்கள் வரவில்லை.
அவர்கள் வந்து எங்களுடன் கலந்துரையாட வேண்டும், எங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும் . நாங்களும் அந்தத் தவறை சரி செய்திருப்போம் . மக்களின் அச்ச உணர்வைத் சரிபடுத்தவே நாங்கள் விரும்புகிறோம். மக்களிடம் பேசவும் தயாராக இருக்கிறோம்

Courtesy : The hindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here