குறைந்த இருப்புக்கான அபராதத்தை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இதன் மூலம் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் எனவும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய அபராத கட்டண விகிதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரையில், பெருநகரங்களில் இருக்கும் வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயையும், நகர்ப்புற பகுதிகளிலுள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் 3,000 ரூபாயையும், கிராமப்புறங்களிலுள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் 1000 ரூபாய் வரையிலும் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்கத் தவறினால் அவர்களுக்கு அபராதம் பிடிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த டிசம்பரில் எஸ்பிஐ வங்கிக்கு 1771 கோடி ரூபாய் வரை எஸ்பிஐ வங்கி அபராதம் வசூலித்திருந்தது.

மிகப்பெரிய தொழிலதிபர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு, அபராதம் என்ற பெயரில் இவ்வளவு தொகையை அடித்தட்டு மக்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி வசூலித்தது கேள்விக்குள்ளாக்கியிருந்தது. மேலும், சிலிண்டர் மானியத்துக்காக வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில்தான் எஸ்பிஐ வங்கி குறைந்த இருப்புக்கான அபராதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது.

குறைந்த இருப்புத்தொகையான 3000 ரூபாயில் 50 சதவிகிதம் குறைவாக இருந்தால் 10 ரூபாயும், 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் 12 ரூபாயும், 75 சதவிகிதத்திற்குமேல் குறைவாக இருந்தால் 15 ரூபாயும் அபாரதம் விதிக்கப்படவுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படவுள்ளது.

அதேபோன்று குறைந்த இருப்புத்தொகையான 2000 மற்றும் 1000 ரூபாயில் 50 சதவிகிதம் குறைவாக இருந்தால் ஐந்து ரூபாயும், 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் ஏழு ரூபாய் 50 காசுகளும், 75 சதவிகிதத்திற்குமேல் குறைவாக இருந்தால் 10 ரூபாயும் அபாரதம் விதிக்கப்படவுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படவுள்ளது.

source: economictimes

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here