ரஜினியின் படங்கள் அவுட்ரேட் அல்லது மினிமம் கியாரண்டி எனப்படும் எம்ஜி அடிப்படையிலேயே வாங்கப்பட்டு வந்தன. ஆனால், காலா படத்தை மினிமம் கியாரண்டியில் வாங்க தயக்கம் காட்டுவதால் படத்தின் ஏரியா விற்பனை இன்னும் முடியாமல் உள்ளது.

மினிமம் கியாரண்டி என்றால் திரையரங்குகள் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளருக்கு முன்பே தந்துவிட வேண்டும். அத்துடன், டிக்கெட் விற்பனையில் இத்தனை சதவீதம் தயாரிப்பாளருக்கு என்று ஒப்பந்தம் போடுவார்கள். உதாரணமாக முதல் மூன்று தினங்களுக்கு டிக்கெட் விற்பனையில் எண்பது சதவீதம் தயாரிப்பாளருக்கு, 20 சதவீதம் திரையரங்குகளுக்கு. மூன்று நாள்களுக்குப் பிறகு இந்த சதவீதம் சிலவேளை 75 – 25 என மாறுபடும். இந்த சின்ன சதவீதத்தில் திரையரங்குகள் தயாரிப்பாளருக்கு கொடுத்த பணத்தை வசூலித்து, அதற்கு மேலும் லாபம் பார்த்துக் கொள்ள வேண்டும். காலா விஷயத்தில் இந்த எம்ஜி முறை வேலைக்கு ஆகாது என்று விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் கைவிரித்துவிட்டன.

இப்போது டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் காலா விநியோக உரிமை வாங்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்