தேவையான பொருட்கள் :

• காய்கள் மற்றும் பழம் கலவை – ஒரு பெளல்

• எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

• ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் (Red Chilli Flakes) – கால் தேக்கரண்டி

• வெல்லம் – 2 தேக்கரண்டி

• எலுமிச்சை சாறு – சிறிது

• உப்பு

• புதினா பொடி (அ) கொத்தமல்லி புதினா கலவை பொடி – கால் தேக்கரண்டி.

செய்முறை :

• காய் மற்றும் பழங்களை நறுக்கி தயாராக வைக்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு லேசாக சூடானதும் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் (Red Chilli Flakes) சேர்த்து பிரட்டவும்.

• இதில் வெல்லம் சேர்த்து கலந்து எடுக்கவும். நீண்ட நேரம் வைக்க கூடாது, வெல்லம் பாகாகிவிடும்.

• அடுப்பிலிருந்து எடுத்து ஆறியதும் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி புதினா பொடி எல்லாம் கலந்து வைக்கவும்.

• இந்த கலவையை காய் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here