(நவம்பர் 20, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

சீனாவின் தலைவர் மாசேதுங் 1958இல் எல்லா சிட்டுக்குருவிகளையும் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்; இதனை “வலிமையான தலைவரின் அவசியமான கட்டளை” என்று பலரும் பாராட்டினார்கள். சிட்டுக்குருவிகள் தானிய விதைகளைச் சாப்பிடுவதால் விவசாயிகள் துன்பப்படுகிறார்கள். எண்ணற்ற சிட்டுக்குருவிகள் அழிக்கப்பட்டன. ஆனால் இதனால் எதிர்பார்க்காத விளைவுகள் ஏற்பட்டன.

சிட்டுக்குருவிகள் வெட்டுக்கிளிகளை, பூச்சிகளைப் பிடித்துத் தின்றுவிடும்; சிட்டுக்குருவிகள் ஒழிப்பால் உயிரிச் சூழல் மாறியது; வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும் பெருகின; அவை சீனாவின் உணவு தானியங்களை அழித்தன. பஞ்சம், பசி, பட்டினி ஏற்பட்டது; மூன்று வருடங்களில் நான்கரை கோடி மக்கள் உயிரிழந்தார்கள். தொடக்கத்தில் இந்த அசவுகரியத்தைப் பொறுத்துக்கொள்ளும்படி மாவோ மக்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் மக்களின் வேதனை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது.
சிட்டுக்குருவிகளுக்கு மரண தண்டனை விதித்ததுபோல மாவோ பல தவறுகளைச் செய்தார்; ஒரு தேசத்தின் தலைவருடைய பெரும் திட்டத்தால் சமூகம் மறுவடிவம் பெறும் என்கிற போலியான நம்பிக்கைக்கு இது ஓர் உதாரணம். 20ஆம் நூற்றாண்டில் இதுபோல பல எச்சரிக்கைக் கதைகள் நமக்குக் கிடைத்துள்ளன; ஸ்டாலின், மாவோவின் கம்யூனிசம் போல; ஹிட்லரின் பாசிசம் போல; இருந்தாலும் நாம் கற்றுக்கொள்வதில்லை. நரேந்திர மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பும் இதைப்போன்ற ஒரு வரலாற்றுத் தவறுதான்.

இந்தக் கருத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அமித் வர்மா நவம்பர் 20, 2016 (ஞாயிறு) எழுதியுள்ளார்; இதைத்தான் இப்போது டாட் காம் நவம்பர் 8ஆம் தேதி இரவு முதல் சொல்லி வருகிறது. 60 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத தேசத்தில் ரொக்கப் பணம் அவசியப்படாத பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று நரேந்திர மோடி சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா?

இதையும் படியுங்கள்: “மோடி மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்.”

இதையும் படியுங்கள்: 500, 1000 ஒழிப்பு: என்ன காரணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here