பேபிகார்ன் பஜ்ஜி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பேபிகார்ன் – 10
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோடா உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சட்டியில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொண்டு, பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று(திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி...
இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களும், இந்தியா 367 ரன்களும் எடுத்து 56 ரன்கள் முன்னிலை பெற்றது.56 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 வது இன்னிங்சை மேற்கிந்தியத் தீவுகள் ஆடத் தொடங்கியது.இந்திய அணியின்...
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12) 2வது...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்