மாலை நேர டிபன்: பால் பன்

0
588

தேவையானபொருட்கள்:

  • மைதா – 2 கப்,
  • தயிர் – 1 கப்,
  • சர்க்கரை – 1 கப்.

பால் பன் செய்முறை:


முதலில் 1 கப் சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் விட்டு கரையவிடவும்.

கம்பி பதம் தேவையில்லை.

சர்க்கரை கரைந்து கொதித்ததும் இறக்கவும்.

இனி ஒரு பாத்திரத்தில் தயிர், 1 சிட்டிகை பேக்கிங் சோடா, சர்க்கரை 2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி மைதா சேர்த்து தண்ணீர் லேசாக தெளித்துக் கொண்டு கொஞ்சம் இளகலாக பிசைந்து கொள்ளவும்.

கொஞ்சம் எண்ணெய்(1 டீஸ்பூன்) ஊற்றி 1 மணிநேரம் ஊற விடவும்.

பின்னர் எண்ணெய் காய்ந்ததும் தீயை சிறிதாக்கி மாவை எண்ணெய் கையால் உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து சர்க்கரை பாகில் போட்டு ஊறியதும் எடுத்து பரிமாறவும்.

சுவையான பால்பன் செய்ய சில குறிப்புகள்:

  • பால்பன் செய்யும்பொழுது நீங்கள் மைதா அல்லது கோதுமை மாவு பயன்படுத்தலாம்.
  • மாவு பிசையும் பொழுது நீங்கள் விருப்பப்பட்டால் 1 முட்டை சேர்த்துக் கொள்ளலாம். 
  • இளம் சூடான பாலில் ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்,  கொதிக்கும் பால் அல்லது ஆறிய பால் பயன்படுத்தக்கூடாது.
  • நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அப்பொழுது பன் இனிப்பு சுவையுடன் இருக்கும்.
  • மாவு பிசையும் பொழுது நீங்கள் இரண்டு தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here