மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு ; பிரக்யா தாக்கூரை விடுவிக்க தேசிய புலனாய்வு முகமை(NIA) என்னவெல்லாம் செய்கிறது? Scroll.in இன் சிறப்பு செய்தி

0
691

(ஜூலை 16, 2019 அன்று வெளியான செய்தி )

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி ரம்சான் மாதத்தின் கடைசி நாள். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாலேகானில் தொழுகைக்காக மக்கள் குழுமியிருந்த போது , மசூதியின் பக்கத்தில் இருக்கும் பிக்கு சௌக்கில் இரவு 9.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது . அந்த குண்டுவெடிப்பில் 10 வயது சிறுமி உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சாமியார் பிரக்யா சிங் தாக்கூரின் இரு சக்கர வாகனத்தில் குண்டு வைக்கபட்டிருந்ததை கண்டறிந்தனர்.  பிரக்யா சிங் தாக்கூர்  ஆர் எஸ் எஸ்ஸில் தொண்டராகவும் இருந்தார். 

அக்டோபர் 2008 இல் பிரக்யா சிங் தாக்கூரை கைது செய்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, சங்பரிவாரின் பெயரைக் கெடுக்க இந்துத்துவா செயல்பாட்டாளர்கள் மீது  பொய் குற்றச்சாட்டு வைக்கிறது காங்கிரஸ் கட்சி என்றது.  

10 வருடங்களுக்கு பிறகு பாஜக சார்பாக போபாலில் போட்டியிட்டு நாடாளுமன்ற எம்பியாகி இருக்கிறார் பிரக்யா சிங் தாக்கூர். தீவிரவாத தாக்குதலில் குற்றவாளியாக இருக்கும் பிரக்யா சிங் தாக்கூர் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது உலகம் முழுக்க பேசும் பொருளானது.  மும்பையில் டிசம்பர் 2018 இல் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு ஆரம்பமானது. வழக்கு பற்றிய செய்திகள் செய்தித்  தாள்களின் உள்பக்கங்களில் கூட வெளிவரவில்லை. பிரக்யா சிங் தாக்கூர் சம்பந்தப்பட்ட வழக்கு பற்றிய செய்திகளை சில ஊடகங்கள் மட்டும்  வெளியிட்டது. 

குண்டு வெடிப்பை நேரில் பார்த்த 124 சாட்சிகளில் 90 பேர் என்ன நடந்தது என்று நீதிமன்றத்தில் கூற அழைக்கப்பட்டனர் ஆனால் அச்செய்திகள் ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை . 

அரசு தரப்பு வழக்கை நிறுத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதைச் செய்கிறது. குற்றச்சாட்டு இல்லாத , பொருத்தமற்ற , மிகப் பெரிய சான்றுகளை நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள் அரசு தரப்பில் . குண்டு வெடிப்பில்  மக்கள் காயமடைந்தனர்; கொல்லப்பட்டார்கள் ; குண்டு வெடிப்பு நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்று குற்றவியல் வழக்கறிஞர் யுக் சௌத்ரி கூறுகிறார். 

இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) 2011 இல் , மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை போலீஸாரிடமிருந்து வழக்கை எடுத்துக் கொள்கிறது . ஆனால் 2015 இல்தான் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறது. அப்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது . அதனால் மாலேகான் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவினர்கள் இந்த வழக்கு பலவீனமடையும்  என்று அஞ்சுகின்றனர்.

அவர்களின் பயத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் அரசு வழக்கறிஞர் ரோகினி சாலியன் , ஜூன் 2015 இல் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரி தன்னிடம் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார். இந்தக் குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை மறுத்தது . 

தேசிய புலனாய்வு முகமை மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்துக் கொண்டது என்பதற்கு சான்றாக மே 2016 -இல் பிரக்யா சிங்கை விடுவித்து ஒரு துணை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை. ஆனால் டிசம்பர் 2017-இல்  நீதிபதி எஸ் டி தக்கேல் பிரக்யா சிங்கை விடுவிக்க போதுமான காரணங்கள் இல்லை அவர் இந்த வழக்கில் குற்றவாளி என்பதை விசாரிக்க போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என்றார் . 

இருந்தாலும் இந்த வருடம் ஏப்ரல் மாதம், பிரக்யா தாக்கூர் போபாலில் போட்டியிட மனு தாக்கல் செய்த போது மாலேகான் குண்டுவெடிப்பில் இறந்தவரின் உறவினர் பிரக்யா சிங் தாக்கூர்  தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று மனு தாக்கல் செய்தார் ஆனால் தேசிய புலனாய்வு முகமை போட்டியிடலாம் என்றது . பின்பு அதற்காக மாலேகான் வழக்கை விசாரிக்கும்  நீதிபதி வினோத் படல்கரின் கண்டனத்தைப் பெற்றது தேசிய புலனாய்வு முகமை. 

தேசிய புலனாய்வு முகமை பிரக்யா தாக்கூரிடம் எவ்வளவு மென்மையாக நடந்துள்ளது என்பது பற்றி Scroll.in 

தளம் அவரின் வழக்கு குறித்த ஆவணங்களை புலனாய்வு செய்தது. புலனாய்வு பல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது 

வழக்கின் பின்னணி 

மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார்  10 க்கும் மேற்பட்ட தீவிரவாத வழக்குகளை விசாரித்து வந்தனர். பெரும்பாலான தீவிரவாத வழக்கு விசாரணைகள் முஸ்லிம் குழுக்களை குற்றம் சாட்டுவதாக இருந்தது. மாலேகான் வழக்கு மட்டும் இந்து தீவிரவாத குழுவை குற்றம் சாட்டியது . 

மாலேகான் குண்டுவெடிப்பு நடந்து ஒரு மாதத்துக்கும் உள்ளாகவே , அதாவது அக்டோபர் 23, 2008 இல் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் 3 பேரை கைது செய்தனர். அதில் ஒருவர் இந்த பிரக்யா சிங் தாக்கூர் , அவரை  சூரத்தில் வைத்து கைது செய்தனர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் . 

தொலைக்காட்சிகள் காவியணிந்த இந்து செயல்பாட்டாளர் தீவிரவாதி என்று கூற ஆரம்பித்தவுடன் சர்ச்சை ஆரம்பமானது. 

அவுட்லுக் இதழ் (outlook magazine) இஸ்லாம் தீவிரவாதத்துக்கு பதிலடியாக இந்து குண்டுகளா? என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது .  

அந்நேரத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ராணுவ அதிகாரி ஒருவரை விசாரிக்க  கடிதம் எழுதி அனுமதி கேட்டது. 2008 நவம்பர் 5  ஆம் தேதி  ராணுவ புலனாய்வு அதிகாரி பிரசாத் ஶ்ரீகாந்த் புரோகித்தை கைது செய்தது தீவிரவாத தடுப்பு பிரிவு. 

2009, ஜனவரியில்  தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையின்படி புரோகித் 2007 ஆம் ஆண்டு ஆர்யவர்தா – இந்துக்களின் நாட்டை  உருவாக்கும் நோக்கில்  அபினவ் பாரத் என்ற அமைப்பை  தொடங்கியுள்ளார். 

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையின்படி அபினவ் பாரத் அமைப்பு  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற  நோக்கில் செயல்பட்டுள்ளனர் .  அவர்களின் நோக்கங்களில் ஒன்று முஸ்லிம் சமுதாயத்தை தாக்குவது . 

மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்த 2008 இல் பல கூட்டங்களை நடந்த்தியுள்ளனர் அபினவ் பாரத் அமைப்பினர். 2008 , ஏப்ரல் மாதம் போபாலில் நடந்தக் கூட்டத்தில் பிரக்யா தாக்கூர் கலந்துக் கொண்டுள்ளார். 

புரோகித் மாலேகான் குண்டுவெடிப்பை திட்டமிட்டுள்ளார் என்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள்  காஷ்மீரிலிருந்து கொண்டுவரப்படது என்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. அபினவ் பாரத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் நாசிக் வீட்டில் வைத்து வெடிகுண்டை தயார் செய்துள்ளனர். 

LML Freedom இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டை இருவர் பொருத்தியுள்ளனர் என்று தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது . அவர்களின் பெயர்கள் ராமச்சந்திரா கல்சங்ரா மற்றும் சந்தீப் டாங்கே. இவர்கள் இருவரும் பிரக்யாவிடம் வேலை செய்தவர்கள் . அந்த இருசக்கர வாகனம் பிரக்யா சிங் தாக்கூரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டு வாங்கியிருந்த வாகனம். 

பிரக்யாவின் அந்த இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது

பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் புரோகித் தவிர தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் மேலும் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். அதில் 7 பேர் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள். அஜய் ராகிர்கர் , புனே தொழிலதிபர் ; ரமேஷ் உபாத்யேய், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் – இவர் புரோகித்தின் நெருங்கிய நண்பர்; சுவாமி ஏடி திர்த் , தன்னைத் தானே சாமியார் என்று சொல்லிக் கொண்டவர் , நிஜ பெயர் – சுதாகர் டிவேதி; சுதாகர் சதுர்வேதி , ராணுவ தகவல்களை பரிமாறுபவர் – இவர் வீட்டில்தான் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டது; ராகேஷ் தாவ்டே புரோகித்துடன் இணைந்து அபினவ் பாரத் அமைப்பை துவக்கியதில் மும்முரமாக செய்ல்பட்டவர்; சமீர் குல்கர்னி போபாலில் கூட்டம் நடந்த இடத்தை புக் செய்தவர், அங்குதான் குண்டு வெடிப்பு பற்றிய திட்டமிடல் நடந்தது. 

மற்ற 2 குற்றவாளிகளான ராமச்சந்திரா கல்சங்கரா தனது சகோதரர் சிவ்நாராயணன் மற்றும் அவரது நண்பர் ஷ்யாம் சாகு உடன் இணைந்து  இரு சக்கர வாகனங்களில் வெடிகுண்டை பொருத்தியவர். பஜ்ரங்தளம் அமைப்பில் உறுப்பினராக இருந்த பிரவீன் தக்கால்கி, மற்றும் ஜகதீஷ் சிந்தாமேன் மகத்ரே (ஆயுதங்கள் கொடுத்து உதவியவர்) ஆகியோர் மீதும்  தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மீதும்  இந்தியத் தண்டனை சட்டத்தின்  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கொலை, குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், வெடிபொருள் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகள், ஆயுத சட்டத்தின் கீழ் 3 பிரிவுகள், சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 பிரிவுகள்,  மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சட்டத்தின் கீழ் 5 பிரிவுகள் என்று  வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.  

Courtesy : Scroll.in 

ஆதாரங்கள் 

 அபினவ் பாரத் குண்டுவெடிப்புக்காக திட்டமிட்டது, அது சம்பந்தமாக நடந்திய  தொலைபேசி உரையாடல்கள், அழைப்பு விவரங்கள்,  குற்றவாளிகளின் அறிக்கைகள் என்று குற்றவாளிகளுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் திரட்டியிருந்தனர். 

மேலும் சாமியார் ஏடி திர்த்தின் லேப் டாப்பை கைப்பற்றியது, அதிலிருந்து குண்டுவெடிப்புக்காக திட்டமிட்ட போது அதாவது 2008, ஜனவரி 25, 26 அன்று ஃபரிதாபாத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் பதிவுகளை கைப்பற்றியது தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார். அவர்கள் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு  படியாக இந்த வெடிகுண்டு நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் என்று கைப்பற்றிய  பதிவுகளின் வாயிலாக  தீவிரவாத தடுப்பு பிரிவு கண்டறிந்தது. 

அபினவ் பாரத்தின் சித்தாந்தமான இந்து ராஷ்டிரத்துக்காக இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்ததாக    புரோகித் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரிடம் விசாரணையின் போது கூறியுள்ளார். அந்தக் கூட்டங்களில் ரமேஷ் உபாத்யேய், சமீர் குல்கர்னி, சுதாகர் திவிவேதி , சுதாகர் சதூர்வேதி ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர். 

ஃபரிதாபாத் கூட்டத்தில் பிரக்யா தாக்கூர் கலந்துக் கொள்ளவில்லையென்றாலும் போபாலில் ஶ்ரீராம் மந்திரில் 2008 ஏப்ரல் 11, 12 இல் நடந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். ஃபரிதாபாத்தில் கூட்டம் நடந்தததறாகன ஆதாரங்களை கொடுத்திருந்த்தனர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் . ஶ்ரீராம் மந்திரில் நடந்த கூட்டத்துக்கான இடத்தை சமீர் சாண்க்யா  புக் செய்த ஆதாரத்தை மட்டுமே கொடுக்க முடிந்தது  தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரால் .

ஃபரிதாபாத்தில் நடந்த கூட்டத்தின்போது சமீர் சாண்க்யாவின் பெயர் சமீர் குல்கர்னி என்ற குறிப்பிடப்பட்டிருந்தது.  அஜய் ரகிர்கரின் டைரியையும் தீவிரவாத தடுப்பு பிரிவு கைப்பற்றியது . அந்த டைரியில்  Bhopal Additional என்ற பெயரின் கீழ் போபாலில் நடந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது .   

மேலும் முக்கியமாக புரோகித் நடத்திய திட்டமிடல் கூட்டங்களில் கலந்துக் கொண்டதாகவும், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் பேசியதாகவும் 2 சாட்சிகள் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரிடம்  கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கத் தேவையான நபர்களை பிரக்யா சிங் தாக்கூர் தருவதாக  சொன்னதாக கூறியுள்ளார். மற்றுமொரு சாட்சியும் அதை ஆமோதித்துள்ளார். அவர்கள் 2 பேரும் மஜிஸ்திரேட் முன்பு தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். இது நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. 

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரின் இரு சக்கர வாகனம் அவர் இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தபட்டிருப்பதற்கான ஆதாரமாக பார்க்கப்படுகிறது . அந்த இரு சக்கர வாகனத்தை  அவர் கல்சங்கராவிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார் ஆனால் கல்சங்கராவுடன் பிரக்யா மாலேகான் குண்டு வெடிப்பு நடந்த அன்று வரைக்கும்  தொடர்பில் இருந்துள்ளார் என்பதை அவருடைய தொலைபேசி  உரையாடல்கள் காட்டிக் கொடுத்துள்ளது.   

மேலும் குண்டு வெடிப்புக்குபின் 2008, அக்டோபர் 8 ஆம் தேதி உஜ்ஜையினியில் நடந்தக் கூட்டத்தில் பிரக்யா தாக்கூர், கல்சங்கராவிடம் மாலேகானில் குறைந்த அளவில் மக்கள் இறந்துள்ளனர் நிறைய பேர் இறந்திருக்க வேண்டும் என்று கோபித்துக் கொண்டதை தான் பார்த்ததாகவும், கேட்டதாகவும்  ஒருவர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  

அக்டோபர் 23 இல் புரோகித் மற்றும் உபத்யேய் க்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை தீவிரவாத தடுப்பு பிரிவு பெற்றுள்ளனர். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்களில் பிரக்யா சிங் பற்றி பேசியுள்ளனர் . அன்றுதான் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டார்.   

சதுர்வேதியின் வீட்டில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் , எல்க்டிரிக் டைமர்களை  கல்சங்கராவின் இந்தூர் வீட்டிலிருந்ததற்கான ஆதாரங்கள், ஷ்யாம் சாகு கல்சங்கராவுக்கு சிம் கார்டுகள் வழங்கியதற்கான ஆதாரங்கள் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அஜய் ராகிர்கர் அபினவ் பாரத் டிரஸ்ட் மூலம் குண்டு வெடிப்புக்கு தேவையான செலவுகளை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரால்  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்  அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். 

புரோகித்  ஒரு ராணுவ புலனாய்வு அதிகாரியாக இருப்பதால்  வலது சாரி இந்துத்துவா அமைப்புகள் குறித்த தகவலை சேகரித்தேன் என்று காரணம் கூறியுள்ளார். அபினவ் பாரத் நடத்திய கூட்டங்களில் அவர் கலந்துக் கொண்டது பற்றி அவர் தனது உயரதிகாரிகளுக்கு தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.    

ராகிர்கர் அபினவ் பாரத்தின் பொருளாளராக செயல்பட்டார் என்பதை ஒத்துக் கொண்ட போதிலும் குண்டு வெடிப்பு சதியில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். மற்ற அபினவ் பாரத் உறுப்பினர்களும் இதையே கூறியுள்ளனர். 

தாக்கூர் போபாலில் நடந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும், கோபத்தில் கூறிய வார்த்தைகள் குண்டு வெடிப்பு சதியில் ஈடுபட்டது ஆகாது எனறும் கூறியுள்ளார். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சேதமடைந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரின் இரு சக்கர வாகனம் –  குண்டு வெடிப்பு நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இரு சக்கர வாகனத்தை கல்சங்கராவிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார் பிரக்யா சிங் .   

ராமச்சந்திரா மற்றும் டாங்கே ஆகியோருக்கு எதிராக  போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. 

வழக்கை எடுத்த தேசிய புலனாய்வு முகமை (NIA)

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு குறித்த விசாரணைகள் பல மாநிலங்களில் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளில் சில பொதுவான வடிவங்கள் காணப்பட்டதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்க  ஒரு மத்திய நிறுவனமாக  தேசிய புலனாய்வு முகமையை உருவாக்கியது . 

தேசிய புலனாய்வு முகமை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை 2011, ஏப்ரல் 1 ஆம்தேதி எடுத்தது ஆனால் பாஜக பதவியேற்ற பிறகு 2015, ஏப்ரலில்தான் இந்த வழக்கை விசாரிக்க துவங்கியது. 2016 மே 13 அன்று தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் இவ்வளவு காலம் தாமதமானதற்கு  காரணம் குற்றவாளிகள் நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் அதன் விசாரணைகள் முடிந்த பிறகே எங்களால் விசாரணையை துவக்க முடிந்தது என்று கூறியது . மேலும் ஒரு துணை விசாரணை அறிக்கையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்தது . 

அந்த துணை விசாரணை அறிக்கை தீவிரவாத தடுப்பு பிரிவு செய்த புலனாய்வுகளை தூக்கி எறிந்திருந்தது. பிரக்யா தாக்கூரின் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இல்லை.  மாலேகான் வெடிகுண்டு வழக்கிலிருந்து பிரக்யா சிங் தாக்கூரை தேசிய புலனாய்வு முகமை விடுவித்திருந்தது .  

மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த துணை விசாரணை அறிக்கை கூறியது. மேலும் அபினவ் பாரத் குற்றம் செய்பவர்களின் கூட்டமைப்பு இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியது. ஷியாம் சாகு,  கல் சங்கரா , மற்றும் பிரவீன் தக்கல்கி ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கியிருந்தது தேசிய புலனாய்வு முகமை . 

Scroll.in 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here