மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா போட்டியிடலாம் ; மோடியால் நீக்கப்பட்ட ராணுவ வீரர் போட்டியிடமுடியாது; சூப்பர் மோடிஜி – பிரஷாந்த் பூஷன்

0
251

 

வாராணசி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த பி எஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயேச்சை வேட்பாளராக அறிமுகமாகி, பிறகு சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜ் பகதூர், ஏற்கனவே எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் உணவு குறித்து வீடியோவில் புகார் கூறியதால், கடந்த 2017ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டவர். 

வேட்பு மனு நிராகரிப்பு குறித்து அவரது வழக்குரைஞர் கூறுகையில், எங்களிடம் தேவையான ஆவணங்களைக் கேட்டனர். அனைத்தையும் நாங்கள் அளித்தோம். ஆனாலும்  வேட்பு மனு தகுதியானது அல்ல என்று நிராகரித்துவிட்டனர். நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்தார்.

வாரணாசியில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் போலியான காவலாளி, உண்மையான ராணுவ  வீரனைப் பார்த்து பயந்துவிட்டார் என்று தேஜ் பகதூர்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய தேஜ் பகதூர் யாதவ், ஏப்ரல் 24-ஆம் தேதி நான் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தேன். ஏப்ரல் 29 அன்று சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்தேன். மனுத்தாக்கலில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முன்னரே எனக்குத் தெரியப்படுத்தி இருக்கலாமே?

குறைந்த நேரமே இருக்கும் சூழலில் தேர்தல் அதிகாரியிடம் எங்களின் சட்டக் குழு அனைத்துத் தகவல்களையும் அளித்துள்ளது. என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளேன்.

நாட்டின் போலியான காவலாளி இந்த உண்மையான ராணுவ வீரனைப் பார்த்து பயந்துவிட்டதால், நான் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலரும் , வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் 56 இன்ச் மார்பு கொண்ட சௌகிதார் வாரணாசியில் நிஜமான ராணுவ வீரரைப் பார்த்து பயப்படுகிறார். மோடி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையத்தை வைத்து ராணுவ வீரரின் வேட்பு மனுவை நிராகரிக்க செய்தார். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது. தீவிரவாத தாக்குதலில் குற்றவாளியான பிரக்யா தேர்தலில் போட்டியிட முடிகிறது. ராணுவ வீரர்களுக்கு தரம் குறைந்த உணவு வழங்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டதால் மோடியால் பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் தேர்தலில் போட்டியிட முடியாது ? சூப்பர்  மோடிஜி சூப்பர் என்று பதிவிட்டுள்ளார்.    

பிஎஸ் எஃப் முன்னாள் வீரர் தேஜ் பகதூருக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது . அரசு வேலையில் இருப்பவர்கள்  பணி நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள்  தேர்தலில் 5 வருடம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார்கள் என்று என் டி டிவி செய்தி வெளியிட்டுள்ளது .

தேஜ் பகதூர் மனு தாக்கல் செய்தபோது தனது மனுவில் பணிநீக்கம் செய்யப்பட்டதை குறிப்பிட்டிருந்தார். தற்போது தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீஸில் ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழை பிஎஸ்எஃப் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டு மே 1 ஆம் தேதி 11 மணிக்குள் சமர்பிக்கும்படி கேட்டிருக்கிறது என்று நியூஸ் 18 (ஆங்கிலம் ) செய்தி வெளியிட்டுள்ளது.  

தி குயின்ட் – ஊடகத்திடம் பேசிய தேஜ் பகதூர் பிரதமர் மோடியின் அறிவுரைப்படியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கூறியுள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி என்னுடைய ஆவணங்களை குறித்து எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, திங்கள்கிழமை வரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இன்று எவ்வாறு பிரச்சனை வந்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here