மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை அதிகரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ரஜினிகாந்த்தின் ’காலா’ மும்பை ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாற்றுத் திறனாளிகளை அரசு பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 1981-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இதையும் படியுங்கள் : காஷ்மீரில் மனித உரிமையை மீறிய அதிகாரிக்கு ராணுவ விருது: அமைதி சாத்தியமா?

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 விழுக்காடு ஒதுக்கீட்டில் (a) பார்வை குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், (b) செவித்திறன் குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், (c) கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) 1 சதவீதமும், (d) புறஉலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே (a) முதல் (d) வரையிலுள்ள பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர்களுக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) 1 சதவீதமும் என ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ’மாட்டுக்கறி குறைந்த விலையில் கிடைக்கச் செய்வோம்’: இது மேகாலயா பாஜக கருத்து

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்