தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமூகவலைதளங்களில் ஒரு பதிவினையிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை சுட்டிக்காட்டி அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசார களத்தில் கமல் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கமல் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவின் கீழ் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், கமல் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவின் கீழ் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது கமல்ஹாசனை நோக்கி, செருப்பு, கல், முட்டை வீசப்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கமல்ஹாசன் சூலூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கமலின் சர்ச்சை பேச்சு பிரதமர் மோடி வரை சென்று விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதற்கு பல விமர்சனங்களும், கண்டனங்களும், ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்..

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கமலின் பதிவு –

சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.

மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை…

நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.

நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு….

“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.

“கோடி”ன்னஉடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை…

Kamal Haasan यांनी वर पोस्ट केले शुक्रवार, १७ मे, २०१९

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here