பெட்ரோல், டீசல் விலை கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின் மே மாதம் முதல் நாளுக்கு நாள் உயர்ந்தபடியே இருந்தது.10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. மக்களின் கடும் அதிருப்தி காரணமாக, மத்திய அரசு விலை குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல் ம்ற்றும் டீசல் விலையையும் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை வைத்தனர்.

இவற்றையெல்லம் கருத்தில் கொண்டு இந்திய எண்ணை நிறுவனங்கள் இந்த மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை நிலவரங்களுக்கேற்பவும்,டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் மாற்றியமைக்கப்படுகிறது.

இதன்படி, இன்று (ஜூலை3) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.40 காசுகளாகளாகவும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.71.12 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடித்து வருகிறது.