மத்திய பிரதேசத்தில் காவலர் தேர்வுக்காக மருத்துவப் பரிசோதனைக்கு வந்த தேர்வர்களின் மார்பில், சாதிப் பிரிவை எழுதியிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், அம்மாநில காவல்துறைக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அப்போது மருத்துவப் பரிசோதனக்காக வந்திருந்தவர்கள் மார்பில், சாதிப்பிரிவை குறிப்பிடும் வகையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ., (ஓபிசி) என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

sc

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள, தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேந்திர குமார் சிங், தேர்வுக்கு வந்த இளைஞர்களின் மார்பில் அவர்களுடைய பிரிவை எழுத வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், தவறான எண்ணித்தில் இந்தச் சம்பவம் நடைபெறவில்லை அம்மாநில டிஜிபி ரிஷிகுமார் சுக்லா கூறியுள்ளார். எனினும் இது தொடர்பாக, தேர்வுக்காக வந்திருந்தவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.

நன்றி: hindustantimes

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்