அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாக வெளியான வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானதிலிருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு வீடியோவில், ஓபிஎஸ் ஆதரவாளரும் மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், ‘சசிகலா அணியில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ரூ.6 கோடி தருவதாகக் கூறினர். அடுத்த நாள் பணம் தட்டுப்பாடு காரணமாக ரூ.2 கோடி பணமும், மீதத்திற்கு தங்கமும் தருவதாக உறுதியளித்தனர். அப்போதே அதைக் கொடுத்திருந்தால் நான் உட்பட யாருமே ஓபிஎஸ் அணிக்கு சென்றிருக்க மாட்டோம். ஓபிஎஸ் அணியில் சில உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 கோடி கொடுத்துள்ளனர்’ எனவும் பதிவாகியுள்ளது.

இது குறித்து பேசிய முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான மாஃபா பாண்டியராஜன், சரவணன் பேசியதாக வெளியான வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்