அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ரயில் டிக்கெட்டுகளுக்கான சேவைக் கட்டணம் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக, இணையவழி பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்தது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளம் (Indian Railway Catering and Tourism Corporation -IRCTC) வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 20 முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த சேவைக் கட்டணத்துக்கு விலக்களிக்கப்பட்டது.

இந்த விலக்கு முதலில் ஜூன் 30 வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை என மூன்றாவது முறையாக நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி மூலம் கிடைக்கும் வருமானத்தில் 33 சதவிகிதம் சேவைக் கட்டணம் மூலம் வருகிறது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் ஐஆர்சிடிசிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: EconomicTimes

இதையும் படியுங்கள்: சீமான்… அரசியல்தான் அப்டீன்னா சினிமாவுலயுமா…?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்