மார்ச் 1 ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பணபரிவர்த்தனை கிடையாது : இந்தியன் வங்கி

The move to restrict the circulation of ₹2,000 currency notes has come after fake notes were found in huge volumes. According to the National Criminal Records Bureau (NCRB), data showed that fake ₹2,000 currency notes were in circulation in the market post-demonetization.

0
1631

ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து மத்திய அரசு புதிய 500 ரூபாய், மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

இந்நிலையில் ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் பணபரிவர்த்தனை இனிமேல்  கிடையாது என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் போது 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here