தனுஷின் மாரி 2 படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமை விற்கப்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், டொவினோ தாமஸ், சாய் பல்லவி, ரோபோ சங்கர் என பலர் நடித்திருக்கும் மாரி 2 டிசம்பர் 21 திரைக்கு வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கமும் அதற்கு அனுமதி கொடுத்துள்ளது. பட வியாபாரம் வேகமாக நடந்து வருகிறது.

மாரி 2 படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையை என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. சுமார் 1.44 கோடிக்கு இந்த உரிமை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

படத்தில் வில்லனாக மலையாளத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் நடித்துள்ளதால் மாரி 2 கேரளாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here