ரசாயன தயாரிப்பு மற்றும் மரபணு மாற்று விதைகளுக்கு பெயர் பெற்ற, பெரிய நிறுவனமான மான்சாண்டோ, க்ளைபோசேட் என்ற ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லியால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஜான்சனுக்கு 289 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ2000 கோடி ) இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது .

பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்று கலிஃபோர்னியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பூச்சிக்கொல்லியில் கலந்திருக்கும் க்ளைபோசேட்(glyphosate) என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் என்று குற்றச்சாட்டுப்படும் வழக்கு விசாரணைக்கு வருவது இதுவே முதல்முறை.

டிவேயின் ஜான்சன் பூச்சிக்கொல்லியில் கலந்திருக்கும் க்ளைபோசேட்ட்டால் தனக்கு புற்றுநோய் ஏற்ப்ட்டது என்று இந்த வழக்கைத் தொடர்ந்தவர். அமெரிக்கா முழுவதும் இம்மாதிரியான புகார்களை 5000 பேர் பதிவு செய்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு ஜான்சனுக்கு வெள்ளை அணுக்களில் ஏற்படும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில், விளையாட்டு மைதானங்களில் புல் தரைகளை பராமரிக்கும் பணியை செய்து வந்தார் ஜான்சன். அப்போது மான்சாண்டோவின் தயாரிப்பான பூச்சிக் கொல்லி க்ளைபோசேட்டை பயன்படுத்தியதாக ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

50

இந்த வழக்கு விசாரணை எட்டு வார காலமாக நடைபெற்றது, மான்சாண்டோவிற்கு எதிரான ஆதாரங்கள் அதிகப்படியாக இருந்ததால் இந்த தீர்ப்புக் கிடைத்தது என்று ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் சரியாக இருக்கும்போது வெற்றிப் பெறுவது சுலபமானது” மேலும் எதிர்காலத்தில் மான்சாண்டோவிற்கு எதிரான வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் நிறுவனமான, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், க்ளைபோசேட் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்” என தெரிவித்தது . ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் க்ளைபோசேட்டை பாதுகாப்பாக பயன்படுத்தினால் அதனால் தீங்கொன்றும் வராது என தெரிவித்திருந்தது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் இந்த முடிவில் தொழிற்சாலைகளின் தலையீடு இருப்பதாக க்ளைபோசேட்டுக்கு எதிரானவர்கள் தெரிவித்திருந்தனர்.

சில ஜனநாயகக் கட்சியினர் அரசாங்க அதிகாரிகளுக்கும் , மான்சாண்டோவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் இருப்பதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர், மேலும் அக்குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டி நீதித் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கலிஃபோர்னியாவில் ஒரு தீர்ப்பில் விற்கப்படும் காப்பியில் புற்று நோய் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் க்ளைபோசேட் புற்று நோயை உண்டாக்கும் என்று தெரிந்திருந்தும் விவசாயத் துறை அந்த பூச்சிக் கொல்லிகளின் மேல் எந்த ஒரு எச்சரிக்கை வாசகத்தையும் பதிவிட அறுவுறுத்தவில்லை.

49

ஐரோப்பாவில், க்ளைபோசேட் மீதான குற்றங்கள் அதிகமாக உள்ளது. இந்த தீர்ப்பு மான்சாண்டோவுக்கு எதிராக ஜெர்மனியின் பேயர் நிறுவனம் எழுப்பியுள்ள நூற்றுக்கணக்கான புகார்களுக்கு முன்னோடியாக இருக்கும் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து “வருந்துவதாக” தெரிவித்த மான்சாண்டோ நிறுவனம், 40ஆண்டுகாலமாக தனது தயாரிப்பு மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது என்பதை வலியுறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

பூச்சிக்கொல்லியில் கலந்திருக்கும் க்ளைபோசேட் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை மான்சாண்டோ நிறுவனம் மறுத்துள்ளது மேலும் கலிஃபோர்னியா நிதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மான்சாண்டோ தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தீர்ப்பு அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம், அமெரிக்க சுகாதார தேசிய நிறுவனங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் க்ளைஃபோசேட் புற்றுநோயை உண்டாக்காது என்று 800 ஆய்வு முடிவுகள் கூறுகிறது . அந்த முடிவுகள் பொய் இல்லை என்றும் ஜான்சனுக்கு இதனால் புற்றுநோய் வரவில்லை என்றும் மான்சாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு பேசிய மான்சாண்டோவின் துணைத் தலைவர் ஸ்காட் பார்ட்ரிஜ் நீதிமன்றம் இதை தவறாக புரிந்து கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

Courtesy : BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here