மான்கட் முறை : முத்தையா முரளிதரனின் அசத்தல் ஐடியா

0
78

மான்கட் முறையில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சாளர்கள் அவுட் செய்வது நன்றாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவீசந்திரன் அஸ்வின் இருந்த போது மான்கட் முறையில் அவர் பேட்ஸ்மேனை அவுட்டாக்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் கிரிக்கெட்டில் மான்கட் விதிகளுக்கு உட்பட்டது, அதில் எந்த தவறும் இல்லை.நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் மான்கட் முறையில் நான் பேட்ஸ்மேன்களை அவுட் செய்வேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப காலத்தில் சி.எஸ்.கே அணியில் விளையாடினார். அதன்பின் பெங்களூரு அணியில் விளையாடிய அவர் தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார்.

மான்கட் முறையில் பேட்ஸ்மேன்களுக்கு அவுட் கொடுப்பது சிறந்ததாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதில் நியாமற்ற தன்மை இருக்கக் கூடாது. பேட்ஸ்மேன்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளர் அல்லது பேட்ஸ்மேன் தவறு செய்கிறார்என நடுவர் தீர்மானித்தால், தவறும் செய்யும் அணிக்கு 5 ரன்கள்தண்டனையாக வழங்கலாம்“ என்றார்.

2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவீசந்திரன் அஸ்வின் இருந்த போது மான்கட் முறையில் அவர் பேட்ஸ்மேனை அவுட்டாக்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் கிரிக்கெட்டில் மான்கட் விதிகளுக்கு உட்பட்டது, அதில் எந்த தவறும் இல்லை. நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் மான்கட் முறையில் நான் பேட்ஸ்மேன்களை அவுட் செய்வேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாட உள்ள நிலையில்  ‘மன்கட்’ முறையில் எந்த காரணத்தைகொண்டு ரன்-அவுட் செய்யக்கூடாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் எச்சரித்த துகுறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here