மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின்(எல்பிஜி)  விலை 76 ரூபாய் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.620 ஆக இருந்தது. அந்த விலை தற்போது ரூ.696 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டகள், மானிய விலையில் குடும்பம் ஒன்றுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு சந்தை விலையில் பணத்தை நுகர்வோர் அளிக்க வேண்டும். பின்னர் மானியத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 12 எண்ணிக்கைக்கும் கூடுதலாக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோர், சந்தை விலையை அளிக்க வேண்டும். மானியத் தொகை அளிக்கப்படாது.

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 3 ஆவது மாதமாக உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here