கிழிந்த முகத்திரையோடு தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி விரும்பமாட்டார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோற்றுவிடும் என்பதால் மக்களைவை தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது என கங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார். மேலும், கிழிந்த முகத்திரையோடு பிரதமர் மோடி தேர்தலை சந்திக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்பால் ரெட்டி, இந்தாண்டு நடைபெறவுள்ள மூன்று மாநில தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய
தோல்வியை சந்திக்கும் என கூறினார். “காரணம் மிக எளிதானது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக
படுதோல்வியை சந்திக்கும். அதன் பிறகு மோடியால் தேசத்தை எதிர்நோக்க
முடியாது,” என்றார் ரெட்டி.

”மூன்று மாநில தோல்விகளுக்கும் மோடி பொறுப்பேற்க விரும்பவில்லை. அதன் பிறகு பாஜக சரிவடைந்து வருகிறது என்பது உறுதியாகிவிடும்,” என்றார்.

”மூன்று மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்தி தனது பிம்பத்தை பாதுகாக்க நினைக்கிறார் மோடி. அதனால் இப்படி நடக்கக்க்கூடும் என்கிறேன். ஏனெனில் அரசியலில் எதைத்தான் உறுதியாக சொல்ல முடியும்?” என்றார்.

பாஜகவை எதிர்கொள்வதற்கான தேர்தல் யுக்தி குறித்து பேசுகையில், பாஜகவிற்கு எதிரான சக்திகள் அனைத்தும் தேர்தலுக்கு முன் ஓரணியில் திரளவேண்டும் என்றார் ரெட்டி.

“அவர்கள் (பாஜகவுக்கு எதிரான சக்திகள்) நிச்சயமாக தேர்தலுக்கு பிறகு ஒன்று கூடுவர். ஆனால் தேர்தலுக்கு முன்பே அவர்கள் ஒன்றுசேர வேண்டும்.

ஏனெனில் தேர்தலுக்கு முன்பு ஒன்று சேர்ந்தால் தான் அதிக இடங்களை கைப்பற்ற முடியும்,” என்றார் அவர்.
சில மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிரான பிராந்திய கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்படாத சூழலில், தேர்தலில் அவர்கள் தனித்தனியே போட்டியிட்டு பிறகு ஒன்று சேர்வார்கள் என்றார். ஆனால் அதுபோன்ற மாநிலங்கள் குறைவாகத் தான் உள்ளன என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here