மாநிலத்தின் வளர்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் உதவியை நாடிய சட்டீஸ்கர் முதல்வர்

0
236

சட்டீஸ்கர் மாநிலத்தை  வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் நோக்கில்,நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜியின் உதவியை  மாநில முதல்வர்  பூபேஷ் பாகல் நாடியுள்ளார்.  மகாத்மா காந்தி பரிந்துரைத்தபடி மாநிலத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை செயல்படுத்துவதில்  சட்டீஸ்கர் அரசு வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

 தற்போது கிடைத்துள்ள பொருளாதார தரவுகளின் படி, இந்திய பொருளாதாரம் மீண்டும் சீராக வெகு காலம் பிடிக்கும் என்றும்,  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்ததாகவும், தற்போது மிக மோசமாக மாறியுள்ளதாகவும் மோடி அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் பொருளாதாரத்திற்காக  நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி . 

இந்நிலையில், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சமீபத்தில் ஒருவார கால அரசுமுறை பயணமாக சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன் மற்றும் நியூயார்க்கிற்கு சென்றார்  மேலும்  ஐ.நா. மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி பல்கலைக்கழகங்களில் பல்வேறு தலைப்புகளில் பேசினார். 

மேலும் மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அங்குவாழும் இந்தியர்களையும் முதலீட்டாளர்களையும் சந்தித்து பேசினார்.  உணவு பதப்படுத்துதல், விவசாய தொழில்நுட்பம் மற்றும் கனிமத் துறை  போன்றவற்றில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

சட்டீஸ்கர்  மாநில  அரசாங்கம்  விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் உதவுவதே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  கிராமவாசிகள் வளமானவர்களாக மாறினால், அதன் செழிப்பு நகர்ப்புற மையங்களுக்கும் மாறும் என்றவர் மாநிலத்தில் சாதி மோதல் இல்லை என்றும்,  சட்டீஸ்கர் இப்போது அரசியல் ரீதியாக நிலையானது, அமைதியானது மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது பூபேஷ்பாகல், நோபல் பரிசு பெற்றவரும், பொருளாதார வல்லுனருமான அபிஜித் பானர்ஜியை கேம்பிரிட்ஜில் உள்ள எம்ஐடியில் சந்தித்து பேசினார். அப்போது, அபிஜித்  சட்டீஸ்கரை பார்வையிட அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பேராசிரியர் பானர்ஜியின் குழு இந்த ஆண்டின் பிற்பகுதியில் சட்டீஸ்கருக்குச் சென்று மாநில அரசின் பல்வேறு முயற்சிகளை மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here