சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையின் 17-ஆவது தவணையாக ரூ.5,000 கோடியை 23 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் விடுவித்தது.

இப்போது விடுவிக்கப்பட்டுள்ள ரூ.5,000 கோடியில் ரூ.4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ.269.59 கோடி யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாகப் பெற்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்து வருகிறது. இதுவரை சுமார் ரூ.1 லட்சம் கோடி அதாவது, 91 சதவீத தொகை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் ரூ.91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ.8,539.66 கோடி சட்டப் பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here