மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளர் 125 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் 245 எம்.பிக்களை கொண்ட மாநிலங்களவையில் வெற்றி பெற 123 எம்.பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயணன், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஆவார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, தெலுங்கானா ராஷ்டிர சமதி, தெலுங்குதேசம், பிஜூ ஜனதாதளம் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அந்த கட்சிகளும் ஆதரவளித்தது.

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்