மாநகராட்சி அதிகாரியை விரட்டி விரட்டி அடிக்கும் பாஜக எம்எல்ஏ (வீடியோ)

Madhya Pradesh BJP MLA Akash Vijayvargiya on Wednesday thrashed a municipal corporation officer in Indore with a cricket bat.

0
961

மத்திய பிரதேசத்தில் , பாஜக எம் எல் ஏ ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேசம் பாஜக எம் எல் ஏ ஆகாஷ் விஜய் வர்கியா , பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன், மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி மக்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அடிக்கிறார். 

பாஜக எம் எல் ஏ ஆகாஷ் விஜய் வர்கியா ஊடகங்களின் கேமராக்கள் முன்னாலேயே மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி  அடிக்கிறார்.  

மாநகராட்சி அதிகாரி இந்தூரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது பாஜக எம் எல் ஏ ஆகாஷ் விஜய் வர்கியாவால் தாக்கப்பட்டிருக்கிறார். 

மாநகராட்சி அதிகாரி ஆக்கிரமிப்பு பணிகளை செய்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் பாஜக எம் எல் ஏ விஜய் வர்கியாவுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து விஜய் வர்கியா அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்துள்ளார். 

இது குறித்து இந்தியா டுடே டிவி யிடம் பேசிய பாஜக எம் எல் ஏ விஜய் வர்கியா மாநகராட்சி அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து மாநகராட்டிக்கு நான் போன் செய்து பார்த்த போது அவர்களுடம் பேச முடியவில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உதவி செய்யும் கடமை என்க்கு இருக்கிறது என்றார். 

வைராலாகி இருக்கும் இந்த வீடியோவில் எம் எல் ஏ விஜய் வர்கியா மாநகராட்சி அதிகாரியை மிரட்டும் காட்சி இருக்கிறது. 5 நிமிடத்துக்குள் நீங்கள் போயாகவேண்டும், இல்லையேல் நடப்பவை எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு என்று விஜய் வர்கியா மிரட்டுகிறார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here