குங்குமப் பூ உலகின் மிக விலையுயர்ந்த வாசனைப் பொருட்களில் ஒன்று. விலை உயர்வானது என்றாலும் ஆயுர்வேத உலகில் இதை விலைமதிப்பில்லா சொத்தாகவே பார்க்கின்றனர். மனிதர்களின் அனைத்து வகை ஆரோக்கிய நலனை மேம்படுத்தக்கூடியது குங்குமப் பூ. மாதவிடாய்க் காலங்களில் அதன் கோளாறுகளைத் தடுக்கிறது.

குங்குமப் பூவில் அலற்சியை குணப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. குங்குமப் பூ பெண்களுக்கு மிகச் சிறந்த மூலிகையாகவே கருதப்படுகிறது. குங்குமப் பூவின் முக்கியத்துவத்தையும் அதை எப்படி பயன்படுத்தி மாதவிடாய் காலங்களின் வலியைக் குறைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

டாக்டர் பாரத் அகர்வால் எழுதிய “ஹீலிங் ஸ்பைசஸ்” என்ற புத்தகத்தில் வெளியான ஆராய்ச்சி அறிக்கையில், மாதவிடாய் கோளாறுகளை சோதிப்பதற்காக 18 முதல் 27 வயதுடைய பெண்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். அதில் ஒரு குழுவிற்கு குங்குமப் பூ கலந்த மூலிகை மருந்தை 3 மாதம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த அறிவுறுத்தினர். மற்றொரு குழுவிற்கு ஸ்ட்ராய்டு கலந்த மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.  மூன்றாவது குழுவினருக்கு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்படாத சில நம்பிக்கை சார் மருத்துவ முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

ஆராய்சியின் முடிவில் குங்குமப் பூ சாப்பிட்டவர்கள் ஸ்ட்ராய்டு மருத்துகளை எடுத்துகொள்பவர்களை விட மாதவிடாய் நேரத்தில் வலியில்லாமல் இருந்தனர்.  நம்பிக்கை சார் மருத்துவ முறைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.  மகப்பேறு மருத்துவ பத்திரிகைகள் குங்குமப் பூவை மாதவிடாய் வலி நிவாரணியாக செயல்படுவதை நிரூபித்துள்ளனர். குங்குமப் பூ மாதவிடாயைத் தூண்டுகிறது. இரத்த ஓட்டத்தை எளிதாக்கி வலி மற்றும் எரிச்சலைத் தடுக்குகிறது.

குங்குமப்பூவைஎப்படிபயன்படுத்தலாம்…?

ஒரு கப் பாலை கொதிக்க வைத்து குங்குமப் பூ பொடியை சேர்த்து, தீயைக் குறைத்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். தேவைப்பட்டால் சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இரவு தூங்கப் போவதற்கு முன் குடிக்க வேணும். மற்றொரு முறை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து அதனுடன் குங்குமப் பூவை சேர்த்து குடிக்கலாம். உங்களின் மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு  மூன்று நாட்களுக்கு முன் குடிக்கத் தொடங்க வேண்டும்.

எச்சரிக்கை

நீங்கள் குங்குமப்பூவை அதிகளவில் பய்படுத்தக் கூடாது. நாள் ஒன்றுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். பாலூட்டும் தாய் என்றால் மருத்துவரிடம் முறையாக ஆலோசனை பெற்று பயன்படுத்தவும். குங்குமப் பூ உடலின் சூட்டை அதிகப்படுத்தும் என்பதால் கோடை காலத்திற்கு இந்த மருத்துவமுறை பொருந்தாது.

Courtesy: ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here