பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட், நிதிப் பற்றாக்குறை காரணமாக முதல் முறையாக தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதிதாக எந்த வேலையும் இல்லாததும், பெற வேண்டிய பாக்கித் தொகைகள் நிலுவையில் இருப்பதாலும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனத்தின் சிஎம்டி கூறியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நிறுவனத்தின் கையிருப்பு நிதி குறைந்து வருகிறது. சம்பளம் வழங்க ரூ.1,000 கோடி கடன் பெறும் நிலையில் இருக்கிறோம். இனி ஒவ்வொரு நாள் செலவுக்கும் கடன்பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Screen Shot 2019-01-05 at 4.49.01 PM

ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் நிறுவனத்தில் 29,035 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ.358 கோடி கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் மாதச் செலவு ரூ.1,400 கோடி.

இந்த நிறுவனத்தின் மிக முக்கிய வாடிக்கையாளர் இந்திய விமானப் படைதான். அதனிடம் இருந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு எந்த நிலுவையும் வரவில்லை. தற்போது இந்திய விமானப் படை கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.15,700 கோடி என்று அந்தச் செய்தி கூறுகிறது .