பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் முன்பே மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

சென்னை திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அந்த மாவட்டங்களில் பணிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பதாகவும் இதனால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளி துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டனம் வசூலிப்பது தொடர்பாக தகுத்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here