மாணவர்கள் அனைவரையும் பாஜகவில் உறுப்பினராக பதிவு செய்ய சொன்ன கல்லூரி முதல்வர்

0
173

குஜராத்தின் பாவ்நகர் நகரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் முதல்வர், தனது மாணவிகளை ஆளும் பாஜகவிவில் சேர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். உள்ளூர் காங்கிரஸ் பிரிவு இந்த நடவடிக்கையை கண்டித்தது மேலும் அத்தகைய கல்வி நிறுவனங்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மாணவர்களை பயன்படுத்தியதற்காக பாஜகவை குற்றம்சாட்டியுள்ளது . அதே நேரத்தில் நிறுவனத்தை நடத்தும் அறக்கட்டளை அவர் ராஜினாமா செய்ததாகக் கூறியது

குஜராத்தின் பாவ்நகரில் உள்ள காந்தி பெண்கள் கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த நோட்டீஸை கடுமையாக எதிர்த்துள்ளது மற்றும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் இன்று (ஜூன் 27) இந்த நோட்டிஸுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

“கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளும், பாஜகவில் உறுப்பினராக பதிவு செய்ய, தங்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை கொண்டு வர வேண்டும். பாவ்நகர் மாநகராட்சி எல்லைகளில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். மேலும்,  பாஜக உறுப்பினராக சேர அனைத்து மாணவர்களும் ஒரு மொபைல் போனை கொண்டு வர வேண்டும். அனைத்து மாணவிகளும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அந்த நோட்டிஸில் கல்லூரி முதல்வர் ரஞ்சன்பாலா கோகில் தெரிவித்துள்ளார்.

கல்லூரி அறங்காவலர் தீரன் வைஷ்ணவ், இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கவனத்திற்கு வந்ததாகக் கூறினார், அதன் பிறகு அவர் உடனடியாக சக அறங்காவலர்களுடன் விவாதித்து கோஹிலைத் தொடர்புகொண்டார்.

 பாவ்நகர் ஸ்திரீ கெலவாணி மண்டல் அறக்கட்டளையின் அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன, மேலும் எந்தவொரு அரசியல் திட்டத்திலும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பொறுப்பாளர் தனது தவறை ஏற்றுக்கொண்டார், மேலும் மாணவர்களை பாஜக உறுப்பினர்களாக சேர்ப்பதில் தனக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை என்று எங்களிடம் கூறினார், ”என்று வைஷ்ணவ் கூறினார்

அவர் ராஜினாமா செய்ய வெளி அல்லது உள் அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர் தனது பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அறக்கட்டளையிடம் கோரிக்கை விடுத்து ராஜினாமா செய்துள்ளார்,” என்றும் அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here