மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கேட்டதாக சென்னை குரோம்பேட்டை பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார். குரோம்பேட்டையில் உள்ளது ஸ்ரீமதி சுந்தரவல்லி மெட்ரிகுலேஷன் பள்ளி (எஸ்எஸ்எம் ஸ்கூல்) . இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியின் தாளாளராக இருக்கும் சந்தானம், மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதுபோல் திடீரென தங்களால் டெபாசிட் எல்லாம் செலுத்த இயலாது என்று பெற்றோர் தெரிவித்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தானம் மாணவர்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதை தட்டி கேட்க வந்த பெற்றோரையும் சந்தானம் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தகவலறிந்த பீர்க்கங்கரணை போலீஸார் பள்ளிக்கு வந்தனர். சந்தானத்தை துணை ஆணையர் முத்துசாமி, சேலையூர் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சந்தானத்திடம் விசாரணை நடத்திநர்.

இதையடுத்து சந்தானத்தை பீர்க்கங்கரணை போலீஸார் கைது செய்தனர். பள்ளியும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்