ஜார்க்கண்டில் மாட்டைக் கொன்றதாக கூறி 7 பழங்குடி கிறிஸ்தவ இளைஞர்களை மொட்டையடித்து , ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளது இந்துத்துவா கும்பல் .
மாட்டைக் கொன்றதாக கூறி போலீசார் செப்டம்பர் 16 ஆம் தேதி குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர். சில்லா பரிஷத் அமப்பின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயல்பாட்டாளருமான நீல் ஜஸ்டின் பெக் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் இந்தக் குற்றச்சாட்டைப பற்றி தெரிவித்துள்ளார். இது பொதுமக்களுக்கு தெரிய வந்தது .
ராஞ்சிக்கு தென்மேற்கே 145 கி.மீ தொலைவில் உள்ள சிம்டேகாவில் உள்ள பெரிகுடரைச் சேர்ந்த பழங்குடி கிறிஸ்தவர் தீபக் குலு (26), செப்டம்பர் 16 தேதி அதிகாலை 25 க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்த கும்பல் ஒன்று தடிகளுடன் கிராமத்திற்குள் நுழைந்ததாகக் கூறினார். அவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தீபக் கூறினார்: “அவர்கள் ஒரு கிராமவாசியான ராஜ் சிங் குல்லுவை அடிப்பதையும், அவரது மனைவி ஜாக்குலின் குலுவிடம் சாதி அடிப்படையில் அவர்களை கெட்ட வார்த்தையால் பேசியதையும் நான் பார்த்தேன் என்று தீபக் குலு கூறியுள்ளார். நான் அவர்களிடம் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்ட போது என்னையும் சாதி அடிப்படையில் கேவலமாக பேசினார்கள் நாங்கள் மாடுகளைக் கொல்கிறோம் என்றும் குற்றம் சாட்டினார்கள்.
யாரும் எந்த மாடுகளையும் கொல்லவில்லை என்று ராஜ் அவர்களிடம் தொடர்ந்து கெஞ்சினார். ஆனால் எங்கள் கிராமத்தில் மாடுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டதாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கூறியதாக ஒரு போலியான வீடியோவை அந்தக் கும்பல் எங்களுக்குக் காட்டியது. அந்தக் கும்பல் தன்னையும் மற்ற ஆறு கிறிஸ்தவ பழங்குடியினரையும் கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து கிராமமான மகாடோ டோலாவுக்கு இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து கம்புகளால் அடித்து பாதி முடியை மழித்து ஜெய் ஶ்ரீ ராம் என்று சொல்ல சொன்னார்கள் என்று தீபக் கூறியுள்ளார்.
பின்பு தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் சிம்டேகா காவல் நிலையத்துக்கு தகவல் தந்தனர். எங்களை மாட்டைக் கொன்றதாக குற்றம் சாட்டினர். சில நிமிடங்களில் காவல்துறை வந்து எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது, ”என்றார் தீபக்.
அவர்களின் குற்றச்சாடின்பேரில் காவல்துறையினர் எங்கள் வீடுகளில் தேடினார்கள், ஆனால் பசுவைக் கொன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் அனைவரையும் விடுவித்தனர். அடுத்த நாள், பாதிக்கப்பட்டவர்கள் சிம்டேகா காவல் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்சி / எஸ்டி காவல் நிலையத்தில் புகார் அ:ளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்றும் மீதமுள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.