மாட்டுச் சாணம், சிறுநீர் தொடர்பான தொழில் தொடங்குவோருக்கு 60% நிதி உதவி; மத்திய அரசு

Startups focused on “commercialising” cow by-products like dung and urine in addition to dairy could get up to 60% of their initial investment as govt funding.

0
162

பால் சார்ந்த பொருட்கள் அல்லாமல் பசுவின் சாணம் மற்றும் பசுவின் சிறுநீர்க் கொண்டு தொழில் தொடங்க முனைவோருக்கு 60 சதவீதம் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மோடி அரசால் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட காமதேனு ஆயோக்குக்கு அரசு ரூ500 கோடி ஒதுக்கியுள்ளது. 

பசுவின் சாணம் மற்றும் பசுவின் சிறுநீர்க் கொண்டு தொழில் தொடங்க முனைவோருக்கு 60 சதவீதம் நிதி உதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய காமதேனு அயோகின் தலைவர் கூறியுள்ளார்.   

இளைஞர்கள் பால், நெய், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டக் கூடாது . அவர்கள் மாட்டுசாணம், மாட்டின் சிறூநீர்க் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ , விவசாய பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதற்காகவே இந்த முயற்சி என்று வல்லப் கத்திரியா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறியுள்ளார். 

இது தொடர்பாக கல்வியாளர்களையும் காந்தி நகரில் இருக்கும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மாணவர்களையும் சந்தித்து பேசியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  

மாட்டுச்சாணத்தையும், சிறுநீரையும் சந்தைப்படுத்துவதற்கான முக்கிய காரணம் பால் கொடுப்பதை நிறுத்தும் கால்நடைகளை மக்கள் அனாதையாக விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.  

பசு மாட்டின் கழிவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உதவிகள் செய்யப்படும் என்றும், ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் கோசாலைகளில், பசு வளர்ப்போருக்கும், உரிமையாளர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் வல்லப் கத்திரியா கூறியுள்ளார்.

மேலும் உள்நாட்டு இன பசுக்கள் நிறைந்த அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து, பசு சுற்றுலா சர்கியூட் உருவாக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.