அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பசுக்குண்டர்கள் யோகி ஆதித்யநாத் கூட்டத்தில் முதல் வரிசையில்….

0
408

உத்தர பிரதேசம் தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கொலை செய்யப்பட்ட அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பசுக்குண்டர்கள்  கூட்டத்தின் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.  முதல்நிலை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர் . 

மகேஷ்சர்மா என்ற வேட்பாளருக்காக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.  இவர் கவுதம்புத் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராவார்.

அக்லக் கொல்லப்பட்ட இதே கிரமாத்தில் யோகி ஆதித்யநாத் கூட்டத்தின் முதல் வரிசையில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் அமர்ந்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்

2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லக் என்பவர்  மாட்டிறைச்சியை வைத்திருந்ததாக கூறி  அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து பசுக்குண்டர்கள் கும்பல் கொலை செய்தது.

இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங் பிற்பாடு தான் எதுவுமே செய்யவில்லை தன் மீது பொய் வழக்குப் போட்டதாகத் தெரிவித்தார். இப்போது அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here