ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாட்டிறைச்சியைக் கொண்டுசென்றதாகக் கூறி, ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் உட்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூனில், ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் அலிமுதீன் என்பவர் தனது காரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி, அவரை வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மேலும் அவரது காரையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

jar

இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஊடகப் பிரிவு பொறுப்பாளர் நித்யானந்த், பசுக்காவலர்கள் அமைப்பைச் சேர்ந்த விக்கி ஷா, ராஜூ குமார், விக்ரம் பிரசாத், கபில் தாகூர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு, ராம்கர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில், புதன்கிழமையன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மாட்டிறைச்சி தொடர்பான சம்பவங்களில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற விழாவில், ”பசு பக்தி பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது” என பிரதமர் மோடி பேசிய அடுத்த நாளான்று இந்தச் சம்பவம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here