இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்றவற்றிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற பெயரால், கடந்த மே மாதம் 23ஆம் தேதியன்று, அறிப்பாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதில், காளைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசு மாடு, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றிருந்தன. மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினரும் மத்திய அரசின் இந்த அறிவிப்பாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அறிவிப்பாணையில் மாற்றம் செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தநிலையில், தற்போது அந்த அறிவிப்பாணையை வாபஸ் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்