மாட்டிறைச்சி உண்பவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று சனாதன் தர்மா பிரச்சார் சேவா சமிதி அமைப்பின் தலைவர் சாத்வி சரஸ்வதி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் பேசிய சாத்வி சரஸ்வதி, ”மாட்டிறைச்சி உண்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் சாகும் வரை தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் மாடுகளைத் தாங்களும் காப்பாற்ற வேண்டும் என மக்களுக்குப் புரியும்” என்றார். மேலும் அவர், “நம் கையில் ஆயுதம் இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நாம் அழிக்கப்பட்டு விடுவோம். பாரதம் இன்று அனைத்துத் திசைகளிலிருந்தும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது” எனவும் பேசியுள்ளார்.

அவரின் இந்தப் பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாத்வி சரஸ்வதி மீது, கோவா மாநில பாஜக அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

கோவாவில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில், 21 மாநிலங்களிலிருந்து சுமார் 130 இந்து அமைப்புகள் கலந்துகொண்டன. மேலும், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்தும் இந்து அமைப்புகள் கலந்து கொண்டன.

இதையும் படியுங்கள் : அவசரகால முதலுதவிக்கான பயிற்சி ஏன் அனைவருக்கும் தேவை?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்