மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்கள் மீதான வன்முறையை தடுக்கவில்லை அரசு – அமெரிக்கா அறிக்கையும் கடுப்பான பாஜகவும்

Mob attacks by Hindu extremists on Muslims and others continued in India in 2018 on the basis of rumours that the victims had traded or killed cows for beef, a US state department report said on Friday, triggering accusations of bias from the BJP. “In 2018, religious freedom conditions in India continued a downward trend,” the United States Commission on International Religious Freedom (USCIRF) Report, 2019, said.

0
668

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, வன்முறையை தடுக்க தவறியுள்ளது என்று அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அரசின் சார்பாக சர்வதேச சுதந்திரம் பற்றி அறிக்கை ஒன்று வெளியிடப்படும். அரசு அதிகாரிகள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள் எனப் பல தரப்புகளிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டு இந்த அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வகையில், 2019 சர்வதேச சுதந்திர அறிக்கையை அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் ஒவ்வொரு நாட்டிலும் மதரீதியாக மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. நாடு வாரியாக ஒவ்வொரு நாட்டிலும் மதம் சார்ந்த கொடுமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் இஸ்லாமிய வழக்கங்களையும், நிறுவனங்களையும் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சிகள், மத்திய மாநில அரசுகள் செயல்படுவதாக இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”இந்தியாவில் 2018ஆம் ஆண்டு மக்கள் தொகையின் எண்ணிக்கை படி 130 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். 2011ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்களாகவும், 14.2 சதவீத மக்கள் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதமும், சீக்கியர்கள் 1.7 சவீதமும் வாழ்கின்றார். மற்ற மதத்தை சார்ந்தவர்கள் 1 சதவீதம் பேரும் வாழ்கின்றார். 

இந்தியாவில் 2018ஆம் ஆண்டு, இந்துத்துவா கும்பல்களால், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாட்டுக்கறி வைத்திருப்பதாக முஸ்லிம் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது. மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்திகளை உருவாக்கி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கொடூரமும் நடைபெற்றுள்ளது. தேசத்தில் பல ,பகுதிகளில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வன்முறையை தடுக்க இந்திய அரசு தவறியுள்ளது. 

முஸ்லிம்கள் மீதான் இந்த தாக்குதல்களுக்கு ஆட்சியாளர்களும் துணைபோவதாகவும் அமெரிக்க அறிக்கை  குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ.க அரசின் மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் என பலரும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் மோசமான கருத்துக்களை சர்வ சாதாரணமாக பேசுகின்றனர். அதுமட்டுமின்றி, அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துபவர்களை கண்டுபிடித்து கைது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்றாலும், அரசியல் தலையீடு மூலம் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். இந்த நடவடிக்கையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயர் அதிகாரிகளும் தலையிட்டுள்ளனர். 

மேலும், இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 18 வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேசத்தில் இப்படியான ஒரு வன்முறையின் போது தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய முஸ்லிம் முதியவரை காப்பாற்ற நடவடிக்கை எதுவும் எடுக்காமல் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல் போலீஸ் தாமதப்படுத்தியதால் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு எடுத்த பல நடவடிக்கைகளால் முஸ்லிம் மக்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு சிறுமான்மைக்கு அந்தஸ்து வழங்குவதை ஆளும் அரசு வலுவாக எதிர்ப்பது, இஸ்லாமிய பெயர்களை கொண்டுள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவது,  உதாரணத்துக்கு அலகாபாத் என்ற பெயரை பிரக்யராஜ் என்று மாற்றியது. இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கை அழிக்க முயற்சிக்கிறது இந்த அரசு  என்று சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள் என்று   இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பசுகுண்டர்களின் தாக்குதலை கடுமையாக கண்டித்து , அவர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . 

மதரீதியான கொலைகள், மதத்திற்காக தாக்குதல், பாகுபாடு காட்டுதல், சிறுபான்மையினர் உடைமைகளை சூறையாடுதல் மற்றும் தனி நபர் விரும்பும் மதத்தை, நம்பிக்கையை பின்பற்றலாம் என்ற உரிமையை நசுக்கும் வேலைகள் இந்தியாவில் நடந்திருப்பதாக அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் மதம் தொடர்பான சுதந்திரத்தை மதிக்கவும், சகிப்புத்தன்மையை மக்களிடையே உருவாக்கவும் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சிகள், மனித உரிமை குழுக்கள், சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.


அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட சர்வதேச மத சுதந்திர அறிக்கைக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்ததாவது:

“மிகப் பெரிய ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடு, பன்முகத் தன்மை கொண்ட நாடு, சகிப்புத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்துக்கு நீண்ட காலமாக உறுதிபூண்டிருப்பது உள்ளிட்டவை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிறுபான்மையின சமூகம் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. 

இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு என்று பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மத சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. ஜனநாயக அரசும், அதன் சட்டங்களும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிறது. 

அரசியலமைப்புச் சட்டத்தால் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தியக் குடிமக்களின் நிலை குறித்து வெளிநாட்டு நிறுவனமோ, அந்நிய நாட்டு அரசோ கருத்து தெரிவிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.

அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின் முழுவிவரம் 174 வது பக்கத்தில் இருக்கிறது 

https://www.uscirf.gov/sites/default/files/2019USCIRFAnnualReport.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here