மாட்டிறைச்சி தடைக்கு ஆதரவாகப் பேசிய அஜ்மீர் தர்கா ஆன்மிகத் தலைவர் தீவான் ஜெய்னுல் ஆபுதீன் அலிகானை அவரது சகோதரர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

கடந்த ஏப்.4ஆம் தேதியன்று, அஜ்மீர் தர்கா ஆன்மிகத் தலைவர் தீவான் ஜெய்னுல் ஆபுதீன் அலிகான், ”நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும். முஸ்லிம்களும் பசுவதைக்கு எதிராக முன் வரவேண்டும். மாட்டிறைச்சி உண்பதைத்
தவிர்க்க வேண்டும். இன்றிலிருந்து நானும் எனது குடும்பத்தினரும் மாட்டிறைச்சி உண்ண மாட்டோம்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது சகோதரரான சையது அலாவுதீன் அலிமி, இஸ்லாமியச் சட்டத்தை மீறும் வகையில் தனது சகோதரர் பேசியதால், அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்?: அவசியம் இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்