சூப்பரான மாங்காய் பச்சடி செய்வது எப்படிஎன்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்  : 

மாங்காய் – 2 

உப்பு – ஒரு துளி, 

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

வெல்லம் – ஒரு பாதி மாங்காய் அளவு

கடுகு – சிறிது

பச்சை மிளகாய் – 2

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்   


மாங்காய் பச்சடி செய்முறை : 

முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  

வெல்லத்தை பொடித்து கொள்ளவும். 

பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை வேக வைக்கவும்.  

கூடவே உப்பு, பச்சை மிளகாயையும் சேர்த்தே வேக வைக்கலாம். 

மாங்காய் நன்றாக வெந்தவுடன் சுத்தமான வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அல்லது வெல்லத்தை துளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டி வெந்த மாங்காயுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். 

கலவை சற்று திக்காக ஆரம்பித்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும். சூப்பரான மாங்காய் பச்சடி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here