005

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் KUV100-ஐ சந்தைப்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாகச் செயல்படுத்தி வருகிறது. KUV100 இப்போதிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசுடைய பிஸ்-4 விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன.

003

இதேபோன்று முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் KUV100 காரை 2019-ல் அறிமுகம் செய்கிறது மஹிந்திரா. இதே மாடலில் டீசலில் இயங்கும் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

002

இதுகுறித்து மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், எஸ்.யு.வி., மாடலில் அட்டகாசமான கார்களை சந்தைப்படுத்துவதுதான் எங்களது விருப்பம். அதற்கு இந்த TUV300, KUV100 இரு கார்களும் முக்கிய பங்கு வகிக்கும். அரசின் பிஎஸ்-4 விதிமுறைகள் வரும் அக்டோபர் 2019முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக இந்த இரு கார்களும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

004

ஸ்டைலுக்காக வெளிப்புறத் தோற்றத்தில் நாங்கள் மாற்றம் கொண்டுவரவில்லை. தொழில்நுட்பம் மற்றும் கார் பொறியியல் அமைப்பிலும் இந்த இரு கார்களும் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன. பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வகையில் KUV100 உருவாக்கியுள்ளோம், என்று தெரிவித்துள்ளது.

001

( இச் செய்தி பல தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்