மஹாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் உத்தவர் அறிவித்துள்ளார்.கொரோனா தொற்று பரவல் மஹாராஷ்டிராவில் வேகமெடுத்து வருவதையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது இவ்வாறு கூறினார்.நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்து 69 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பிற்குள்ளாயினர். 904 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் ஒரே நாளில் மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 348 பேர் உயிரிழந்துள்ளனர்.இம்மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதையடுத்து சில தினங்களுக்கு முன் முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். 

***
**

15 நாட்களுக்கு முழு ஊரடங்குஉத்தவ் அறிவித்துள்ளதாவது: நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகள் தொடரும். மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம். பஸ், ரயில் ,மருத்துவம் அத்தியாவசிய சேவை இருக்கும்.

அனைத்து அலுவலகங்களும் 15 நாட்களுக்கு மூடப்படும். பெட்ரோல், டீசல், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்களை பக்கத்து மாநிலங்களிலிருந்து உதவி பெற மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதி. மக்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். இந்திய விமானப்படையின் உதவி தேவை என பிரதமரிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு உத்தவ் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here