மஹாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு

Government of Maharashtra extends lockdown till May 31 for containment of COVID19.

0
324

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. 4 ஆம் கட்டமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பில் முதலிடத்தில்உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் 30,70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,135 பேர் உயிர் இழந்துள்ளது குறிப்பைடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here