மாலை வேளையில் காபியுடன் சூடாக சுவைக்க மஷ்ரூம் பக்கோடா சமையல். ருசியான மஷ்ரூம் பக்கோடா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க.

சமைக்க தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – ஒன்றரை கப்,
கடலை மாவு – ஒரு கப்,
நறுக்கிய மஷ்ரூம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

DVlw83WWkAI778V

செய்முறை :

முதலில் அரிசி மாவுடன் கடலை மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெண்ணெய் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

இதை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்