1. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலுள்ள மூன்று தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (இன்று) காலை எட்டு மணிக்குத் துவங்கியது. மத்திய பிரதேச மாநிலம் முங்காவுலி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரசிங் மற்றும் கொலாராஸ்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராம் சிங் யாதவ் ஆகியோரின் மறைவை அடுத்து, காலியாகவுள்ள இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் பிப்.28ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. அதேபோன்று ஒடிசா மாநிலம் பிஜப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

2. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தநிலையில் முதன்முறையாக பிரதமர் மோடி இது தொடர்பாக பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நிதி முறைகேடுகளுக்கு எதிராக தனது அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதைக் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

3. மாநிலங்களவை உறுப்பினர்களாகவுள்ள மத்திய அமைச்சர்களான ரவி சங்கர் பிரசாத், ஜே.பி.நட்டா உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து இப்பதவிகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

4. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, நீரவ் மோடி நிறுவனத்தின் தூதுவராக இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, அந்நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

5. விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடைபிடிக்கும் மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here