24 மணிநேரமும் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது.

இங்கு மழையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Image

கடந்த ஒரு வாரமாக சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், பல இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.

இதனையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில், 24 மணிநேரமும் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது. இங்கு மழையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here