வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

அதற்கு அருண் ஜெட்லி தான் அவருடன் பேசவில்லை என்றும் அது முறையான சந்திப்பு அல்ல என்றும் கடும் மறுப்புத் தெரிவித்தார்.

ஒருமுறை அவையிலிருந்து நான் எனது அறைக்கு சென்றபோது, விறுவிறுவென வந்து என்னுடன் சேர்ந்து நடந்தார்.அப்போது, வங்கி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால், நீங்கள் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை; வங்கிகளிடம்தான் உங்களது திட்டங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டேன். அப்போது, அவரிடம் இருந்து எந்த ஆவணங்களையும் நான் பெறவில்லை. இந்த ஒரு வரி உரையாடல்தான் எங்களிடையே நடைபெற்றது. அதுவும், எம்.பி. என்ற உரிமையை அவர் தவறாக பயன்படுத்தியதால் நடைபெற்ற உரையாடல் என்று அருண் ஜெட்லி விளக்கமளித்தார்.

மல்லையா தான் லண்டனுக்கு கிளம்புவதாக அருண் ஜெட்லியிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இவ்வாறு மல்லையா கூறியது இந்திய ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் பாஜகவை தாக்கி பேசியது. அது ஆளும் பாஜகவுக்கு நல்ல செய்தியாக இல்லைதான் . ஆனால் பிரச்சனை லண்டனுக்கு போவதற்கு முன் மல்லையா யாரை சந்தித்தார் என்பது அல்ல.

மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த வலுவான லுக் அவுட் நோட்டீஸ் எவ்வாறு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்? அக்டோபர் 24, 2015-இல் தப்பிச் செல்வதை தடுக்கும் நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக மாறியது எப்படி என்பதுதான் பிரச்சனை.

அக்டோபர் , 16, 2015 இல் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால் கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ உத்தரவு பிறப்பித்திருந்தது . ஆனால் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே சிபிஐ தனது நிலைப்பாடை மாற்றி தப்பிச் சென்றால் தெரிவிக்கவும் என்று உத்தரவு பிறப்பித்தது .

இந்த உத்தரவு வந்த 3 மாதங்களுக்குள் மல்லையா யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டெடின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தனக்கு வரவேண்டிய 75 மில்லியன் டாலர்களைப் பெறுகிறார். ராஜினாமா செய்யும்பொது இங்கிலாந்தில் இருக்கும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கவே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

மல்லையா ராஜினாமா செய்த பிப்ரவரி 26 அன்று பாரத வங்கிக்கு (State Bank of India ) மல்லையா ரூ1600 கோடி கடன்காரராக இருந்தார். அன்று பாரத வங்கி பெங்களூரில் இருக்கும் கடன் மீட்பு நீதிமன்றத்திடம் அவருடை பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது . கடன் மீட்பு நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து கொண்டிருந்த மார்ச் 2 ஆம் தேதி மல்லையா நாட்டை விட்டு தப்பி செல்கிறார். மல்லையா டெல்லியிலிருந்து தப்பிச் செல்லும் போது அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

மல்லையா நாட்டைவிட்டு தப்பிச் சென்றவுடன் பாரத வங்கி கர்நாடாகா உயர்நீதிமன்றத்திலும் , உச்சநீதிமன்றத்திலும் கொடுத்த கடனை திரும்ப பெற முறையீடு செய்கிறது . அப்போது இங்கிலாந்தில் இருந்த மல்லையா மீது நடவடிக்கை எடுக்க இரண்டு நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை.
பிப்ரவரி 2017 இல் , மோடி அரசு மல்லையாவை நாட்டுக்கு கொண்டு வர பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தது . அந்த வழக்குதான் இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது .

இதற்கு யார் பதில் சொல்ல வேண்டும் ?

சிபிஐ லுக் அவுட் நோட்டீஸை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது . அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி மாறியது. அதுவே மல்லையா செக் செய்யப்பட்ட தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது. இரண்டரை வருடங்களாக இந்த லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம் பற்றி ஏன் யாரும் பேசவில்லை?

சிபிஐக்கு எப்போதுமே மல்லையாவை கைது செய்ய வேண்டும் என்று எண்ணம் இல்லை ஏனென்றால் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்ய நாங்கள் யாருக்கும் லுக்அவுட் நோட்டீசை வழங்கவில்லை. மல்லையா வெளிநாட்டுக்கு சென்றால் தெரிவிக்கவும் என்பதே அவருக்கான நோட்டீஸ், ஆனால் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஒரு அதிகாரி தெரியாமல் காவல் என்பதை டிக் செய்துவிட்டார். அதானால் பிழை ஏற்பட்டுவிட்டது .

அவர் 2015-ஆம் ஆண்டு இறுதியில் மிக சகஜமாகவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். மேலும் அவரை கைது செய்ய எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் எப்படி கைது செய்ய முடியும்?

இதுதவிர விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை என்று லுக் அவுட் நோட்டீஸ் குழப்படிப் பற்றி சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கிறது .

அவ்வாறு சிபிஐ தரப்பு தவறு செய்திருந்தால் அது மாபெரும் தவறு. மேலும் அப்பிழை மக்களின் பணமான ரூ9400 கோடியை இழக்க வைத்துவிட்டது. பாஜக எம்பி ஒருவர் கூறுவது போல் லுக் அவுட் நோட்டீஸை நீர்த்து போக செய்தது மல்லையாவை தப்பிக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட சதியாகவும் இருக்கலாம் .

Courtesy : Scroll.in

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்