மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். மாற்றுப்பாதையில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் புலம்பெயர் தமிழர்கள் அதிக கட்டணம் செலுத்துகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையை குறிப்பிட்டு அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்பாடுகளை தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கோவிட் கால ‘விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்’ உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here