மலாலாவை சுட்ட பயங்கரவாதி ஜெயிலில் இருந்து தப்பியோட்டம்

Ehsanullah Ehsan is also responsible for the Peshawar Army school terror attack in 2014, in which 132 students were killed.

0
221

பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வருபவர் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யுசுப்சாய். பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த மலாலாவுக்கு 2014 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மலாலா மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவரை லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.

அதேவேளை, மலாலா மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய தலீபான் பயங்கரவாதி இஷானுல்லா இஷானை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஜெயிலில் இருந்து பயங்கரவாதி இஷானுல்லா இஷான் தப்பியுள்ளான். அவன் ஜெயிலில் இருந்து தப்பிய பிறகு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான்.

அதில் அவன், ‘பாகிஸ்தான் சிறையில் இருந்து கடந்த 11 ஆம் தேதியே தப்பிவிட்டதாகவும் 2011 ஆம் ஆண்டு தன்னை சரண் அடையுமாறு கூறியபோது அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் கூறியுள்ளான்.

இஷானுல்லா இஷான் பெஷாவரில் 2014 ஆம் ஆண்டு ராணுவப் பள்ளியில் நடந்த தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here