மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு

0
2266

பெருங்குடல் மெதுவாக வேலை செய்யும்போது கழிவுப் பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.எப்போது மலம் வந்தாலும் அதை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உடலும் மனமும் தளர்வாக இருப்பது அவசியம்.

ஒரு வாரத்தில் நான்கு அல்லது அதற்கும் குறைவாக மலம் வெளியேறினால் அல்லது மிகவும் சிரமத்துடம் மலம் வெளியேறினால் மலச்சிக்கல் என்கிறோம்.

மலச்சிக்கல் வருவதற்கு பொதுவான காரணங்கள் :

 • வாழ்வியல் முறை மற்றும் உணவு முறையில் மாற்றம்.
 • நாள் ஒன்றுக்கு தேவையான அளவு நீரைப் பருகாமல் இருப்பது.
 • போதுமான அளவு நார்ச் சத்துள்ள காய்கறி மற்றும் பழவகைகளை சாப்பிடாமல் இருப்பது.
 • உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது. அடிக்கடி பிரயாணம் செய்வது.
 • பெருங்குடல் மெதுவாக வேலை செய்யும்போது கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.
 • மன அழுத்தம் மற்றும் மனம் தொடர்பான நோய்களும் மலச்சிக்கலுக்கு ஒரு வகையான காரணம்.
 • இரும்புச்சத்து டானிக் மற்றும் மாத்திரைகள். அத்துடன் மாத்திரைகளை உணவு போல எடுத்துக் கொள்பவருக்கும் கட்டாயம் வரும்.
 • பெண்களுக்கு கர்ப்பகாலங்களிலும், மாதவிடாய் நேரங்களிலும் மலச்சிக்கல் வருவது இயற்கையே

மலச்சிக்கல் சரியாக :

 • முளைக்கீரை, முருங்கை கீரை போன்ற கீரை வகைகளைத் தினமும் சாப்பிடலாம். அல்லது அனைத்து கீரை வகைகளில் உள்ள சத்துக்கள் அகத்திக் கீரையில் உள்ளது. இதை வாரம் ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.
 • நார்ச்சத்து நிறைந்த பழவகைகள், குறிப்பாக பப்பாளிப்பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும். இரவில் மாம்பழம் சாப்பிடலாம்.
 • மந்தாரை பூவை பொடி செய்து சர்க்கரை கலந்து 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிடவும்.
 • நில அவரை இலையை துவையலாய் அரைத்து இரவில் சாப்பிடலாம்.
 • முள்ளங்கி இலைச்சாறு 5 மிலி அளவை மூன்று வேளை சாப்பிட்டு வரலாம்.
 • முடக்கத்தான் இலையை அனைத்துச் சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வாரம் 1 முறை சாப்பிடவும்.
 • வெந்நீர் ஒத்தடம் வயிற்றில் கொடுத்து மலம் கழிக்கத் தீரும்.
 • நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் ஜீரண சக்தி பெருகும்.
 • காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி கலந்து சிறிது நாட்டு தேன் கலந்து பருகலாம்.
 • எப்போது மலம் வந்தாலும் அதை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உடலும் மனமும் தளர்வாக இருப்பது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here